தமிழ்நாடு

 ‘தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி’ :  7 நாள் அன்புமணி சுற்றுப்பயணம்

தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், "தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி' என்ற

தினமணி

தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், "தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி' என்ற தலைப்பில் பங்கேற்கும் கலந்துரையாடல் இன்று முதல் 7 நாட்கள் 7 நகரங்களில் உரையாற்றுகிறார்.

"தமிழக வளர்ச்சி பற்றி அன்புமணி' என்ற தலைப்பில் 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு, 7 நகரங்களில், கல்வி, சுகாதாரம், ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகிய 7 தலைப்புகளில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுகிறார்.

இதில், முதல் நிகழ்ச்சியாக "சுகாதாரம் குறித்து அன்புமணி' என்ற தலைப்பில் தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து வேலூர் ஊரீசு கல்லூரி காப் அரங்கத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து நாளை சேலத்தில் ‘மது ஒழிப்பு குறித்தும், 12-ஆம் தேதி கோவையில் ‘தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றுகிறார். 13-ஆம் தேதி திருச்சி திருவானைக்காவலில் ‘வேளாண் புரட்சி குறித்தும், 14-ஆம் தேதி மதுரையில் ‘ஊழல் ஒழிப்பு குறித்தும், 15-ஆம் தேதி நெல்லையில் ‘தரமான கல்வி குறித்தும் உரையாற்றுகிறார். நிறைவாக 16-ஆம் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இதில், பொதுமக்கள் பங்கேற்று திட்டங்கள் ஆலோசனைகளை வழங்கவும், சுகாதாரம் குறித்து கேள்விகளை எழுப்பவும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

SCROLL FOR NEXT